சாரு நிவேதிதா என்ற புனைபெயரில் எழுதும் K.அறிவழகன் தமிழில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். இவர் அரசாங்க பணியில் இருந்து விலகி எழுத்துப் பணிக்கு வந்தவர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர்.
தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம் கொண்ட சாரு நிவேதிதா, 'ஜீரோ டிகிரி', 'கோணல் பக்கங்கள்' என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம்.
தமிழில் பல எழுத்தாளுமைகளின் கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.
"ஜீரோ டிகிரி" இவருடைய சிறந்த படைப்பு. "கலகம் காதல் இசை" இசை பற்றிய சிறந்த அறிமுக நூல்.
முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள், நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் , பின்பு அதை நீக்கியதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.
படைப்புகள்
1.எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் (புதினம்)
2. கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
3. சீரோ டிகிரி (புதினம்)
4.கோணல் பக்கங்கள் - (பாகங்கள் 1,2,3) (பத்திகள்)5. தப்புத் தாளங்கள் (பத்திகள்)
6. நேநோ (சிறுகதை)
7. ராஸ லீலா (புதினம்)
8.எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
9. சரசம், சல்லாபம், சாமியார்
10. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (சிறுகதைத்தொகுப்பு)
11. கடவுளும் நானும்
12. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
13. ஆஸாதி ஆஸாதி ஆஸாதி
14. சினிமா சினிமா
15. காமரூப கதைகள்
16. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
17. மூடுபனிச்சாலை
18. தீராக்காதலி
19. திசை அறியும் பறவைகள்
20. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
21. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
23. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
24.கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
25.கலையும் காமமும் - விவாதங்கள்
26. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
27. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்
சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் | ||||
No. | Book Title | Author | Download | |
1 |
| |||
2 | சாரு நிவேதிதா | |||
3 | சாரு நிவேதிதா | |||
4 | கடவுளை கண்டேன்-சர்வரோக நிவாரணம் | சாரு நிவேதிதா | ||
5 | சாரு நிவேதிதா | |||
6 | சாரு நிவேதிதா | |||
7 | சாரு நிவேதிதா | |||
8 | சாரு நிவேதிதா |
கதை சொல்லி
தமிழின் முன்னணி எழுத்தாளரின் குரலை இதுப் போல் கதை சொல்லியாக கேட்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை. சாருவின் இந்த மூன்று கதைகளும் நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். முதல் கதையில் இருந்தே தொடங்கும் சாருவின் வசீகரம் கடைசி வரை தொடர்கிறது. இதை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவது என்பது உண்மை.
கதைகளை சாரு நிவேதிதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
1. முதல் கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்
2. இரண்டாவது கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்

3. மூன்றாவது கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்

சாரு நிவேதிதா தீரா நதிக்கு அளித்த பேட்டி இங்கே தரவிறக்கிப் படியுங்கள்.
இந்தவார மென்பொருள் விரைவாக காப்பி செய்ய டேராகாப்பியின் புதிய வெளியீடு இங்கே
(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)
7 comments:
Dear Friend,
I am very much thankful for your great service for tamil language. Absolutely, your updated tamil ebooks are very useful for reading us, which is not avail here.
Some of your files updated in depositfiles.com but Unfortunately depositfiles.com is not activated in our country.
Please advice if any alternative file links for some files, which avail all in depositfiles.com.
with regards,
Raj
Malaysia
nagarajanmails@gmail.com
Hi friend,
ziddu.com links all so available,
thank you friend.
எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும், சீரோ டிகிரி, ராஸ லீலா... இந்த மூன்று புத்தகங்கள் கிடைக்குமா அன்பரே...
any one please sent me a charu nivathitha books in pdf to ramkumar.add@gmail.com
I searched but nothing was showed up. Could you please provide the links
Anupiyachu!
VPN pottu paathan 1st link mattum work aanuchu!
Entha punniyavanavathu mattra puthagangal luku link / soft copy ethavathu irupin nrharish123@gmail.com intha mail id ku anupuna perum punniyavangalaka aavirkal!
Thanks in advance!
Post a Comment
மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...