Friday, 3 February 2012

பிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..

    
  வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது புத்தகங்கள் மற்றும் நூலகங்களின் வாயிலாகத் தான். எனவே புத்தக பொக்கிஷகளை போற்றி பாதுகாப்போம்.
    பண்டைய மெசபடோமியப் பிரதேசம் 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாக துறையில் ஏற்பட்ட குளறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான சென்னாசெர்ப் (கி.மு.1300 – கி.மு.1200) அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைக்கும்படி உத்தரவிட்டார். 
  இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், அரசாங்க கடிதங்கள், அரசு உளவாளிகளிடம் இருந்து பெறப்படும் உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் கீழ் வரும் முக்கிய ஆவணங்கள் போன்றவை களிமண் தகடுகளில் எழுதி சூளைகளில் சுட்டு அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவரைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
    அசிரியப் பேரரசின் கடைசி அரசரான அசுர்பானிபல் (கி.மு.700 – கி.மு.600) காலத்தில் இக்களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது, அத்தனையையும் வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாப்பது சிரமமாக இருந்த காரணத்தினால் அனைத்தையும் அசிரியாவின் (தற்போது ஈராக்) தலைநகரான நினிவாஹ் (Nineveh – தற்போது மொசூல் (Mosul) ஒன்றிணைத்து அவற்றை துறைவாரியாக பிரித்து அடுக்க உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறை வாரியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் The Royal Library of Ashurbanipal என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான களிமண் தகடுகள் அரசாங்க ஆவணங்களாகத்தான் இருந்தது.
   பணிகள் துவங்கிய சிறிது காலத்திலேயே அலெக்ஸாண்டர் இறந்து போனாலும் அலெக்ஸாண்டரின் நெருங்கிய நண்பரும் அப்போதைய எகிப்தின் அரசருமானதலாமி (Ptolemy I; கி.மு.305 - கி.மு.282) முன்னின்று பணிகளை மேற்பார்வையிட்டு நிறைவு செய்தார். இறுதியாக கி.மு.300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.அதன் பிறகு ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகத்தின் பயன்பாடுகளை அறிந்து தங்களது பல்கலைக்கழக வளாகங்களிலிலேயே நூலகங்களை நிறுவத்தொடங்கின.
 (நன்றி வரலாற்று சுவடுகள்)

பிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் எண் ஜோதிட பலன்களை அறிய  தரவிறக்க இங்கே
கிளிக்குங்கள். 
அல்லது இங்கே கிளிக்குங்கள்.  

Book Title                                                      Author                                       Download PDF
ஆத்மா-மோட்சம்-நரகம்               பெரியார்      
மர்பி விதிகள் ஆயிரம் மர்பி விதிகள்
பெண் எப்படி அடிமையானாள் பெரியார்
ரோமியோ ஜூலியட் தமிழில் ஷேக்ஸ்பியர்
தகவல் அறியும் உரிமை சட்டம்-தமிழில் சிவா
கவிதைத்தொகுப்பு மல்லிகை
தென் இந்திய வரலாறு நீலகண்ட  சாஸ்திரி
தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ் சுவையான தகவல்கள் ஸ்டீவ் ஜாப்ஸ்
தின்பண்டங்கள் (Snacks) செய்முறைகள் சிநேகதி


பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" முழுவதும் நல்ல தரத்துடன் MKV வீடியோ டவுன்லோட் செய் Endrendrum Raja - Musical Full show (2011-2012) 

(இணைப்புகளின்     காலவரையறை நிச்சயமற்றது,  ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில்     அனைத்து பிடிஎப்- களையும்  தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)Friday, 20 January 2012

சாஹித்திய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..

                  ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.
      இவர் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறார் என்றொரு  பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே! மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?
         ஜெயகாந்தன்  சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து விரிந்து இருக்கின்றது.
       ஜெயகாந்தனின்  இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

 சாகித்திய அகாதமி விருது,  2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருதுகள் பெற்றார்.

புத்தகத்தின் பெயர்      எழுத்தாளர் டவுன்லோட்
சில நேரத்தில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
இன்னும் ஒரு பெண்ணின் கதை                ஜெயகாந்தன்
சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தன்
சிறுகதை பகுதி ஒன்று ஜெயகாந்தன்
சிறுகதை பகுதி  இரண்டு                                                                                         ஜெயகாந்தன்            
சிறுகதை பகுதி மூன்று     ஜெயகாந்தன்

பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" முழுவதும் நல்ல MKV வீடியோ டவுன்லோட் செய் Endrendrum Raja - Musical Full show (2011-2012)

(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி படித்து மகிழுங்கள்.)
Sunday, 1 January 2012

2012 புத்தாண்டு 12ராசிக்கான பலன்கள் EBOOK மற்றும் general knowldge EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய...


          உலகின் ஒவ்வொரு பகுதியிலும் புது வருடம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. ஜனவரி 1 புது வருடம் என்பது கிரிகேரியன் காலண்டர்படி உலகம் முழுவதும் வெகு பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலேயே, வரலாற்றில் பல தினங்கள் - டிசம்பர் 25, மார்ச் 1, செப்டம்பர் 1 - என புது வருடம் பின்பற்றப் பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் நவீன கலியுக கால கட்டத்தில் ஜனவரி ஒன்றே புது வருடம். அதேபோல் கொண்டாட்ட முறைகளும், புது வருட சம்பிரதாயங்களும் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.

       ஜப்பானியர்கள் தங்கள் புது வருடத்தை - ஓஷாகட்சூ - ஜனவரி 1 அன்றே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று இருக்கும் புது வருட சம்பிரதாயத்தையே பின்பற்றுகிறார்கள். அரக்கனை விரட்ட புது வருடத்தன்று வைக்கோலை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். எல்லோரும் விழுந்துவிழுந்து சிரிப்பார்களாம். 108 திவ்யதேசம் மாதிரி, ஜப்பான் கோயில்களில் 108 முறை டணால் டணால் என்று மணியை ஓங்கி அடிப்பார்களாம்.

       ஜனவரி 1 அன்று புது வருடத்துடன் புனித பேஸில் அவர்களின் நினைவு தினத்தையும் கிரேக்கர்கள் கொண்டாடுகிறார்கள். புனித பேஸில் ஏழைகளுக்கு உதவிய மகான், இரக்க குணமுடையவர். இவர்கள் கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கேக்கை சாப்பிடும்பொழுது மட்டும் கெடுபிடியான விதிமுறைகள் இருக்கும். அதாவது முதல் துண்டு புனித பேஸிலுக்கு, இரண்டாவது துண்டு வீட்டுக்கு, மூன்றாவது முதியவர்களுக்கு, பிறகு குழந்தைகளுக்கு, அதன்பின் வர முடியாதவர்களுக்கு என்று முறைப்படி கொடுத்து உண்பார்கள். அதே போல் வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் சில துண்டுகள் ஒதுக்கப்படும். அதிர்ஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் என எல்லாவற்றையும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வருகையை வைத்துக் கணிக்கிறார்கள்.

     ஜனவரி 1 நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு முதன் முதல் வீட்டுக்கு வரும் ஆண்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அந்த ஆண் வரும் பொழுது பணம், ப்ரெட் என்று அந்தக் குடும்பத்துக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொண்டு வருவார். அப்படிக் கொண்டு வந்தால், அந்த வருடம் முழுவதும் அந்தக் குடும்பத்துக்கு எல்லா வளமும் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு பெண்ணோ, செம்பட்டை முடிக்காரரோ அச்சமயத்தில் வந்தால், அதைக் கெட்ட சகுனமாகக் பிரிட்டனில் கருதுகின்றனர்.

வாழ்வினில் துன்பங்கள் அகன்று  
நம்பிக்கை ஊட்டும் சிறந்த ஆண்டாக 
2012 அனைவருக்கும் இருக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
HAPPY NEW YEAR2012 புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ராசி பலன்கள்
100-Tips-வேலைவாய்ப்பு-100-டிப்ஸ் வேலைவாய்ப்பு-100-டிப்ஸ்
Pangusanthai in Tamil Pangusanthai in Tamil
பயில்வோம் பங்கு சந்தை பயில்வோம் பங்கு சந்தை
Tamil general knowldge  pdf Tamil general knowldge  Friday, 23 December 2011

கார்ல் மார்க்ஸ் EBOOKS மற்றும் சிறந்த சில EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய...

     
     கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு,  மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.
     அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும் , கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.
    
பொருள்முதல்வாதக் கொள்கை மீதான கார்ல் மார்க்சின் விரிவான விளக்கமே மார்க்சிய பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மரபான பொருள்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல் வாதத்தினை இயங்கியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியல் பொருள்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார். மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்படியானது எனும் கருத்துமுதல்வாதிகளின் முடிவினை முற்றாக கழித்ததாக பொருள்முதல்வாத தத்துவம் அமைகிறது. கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனை ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது என கருதுவதே பொருள்முதல்வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விலக்குகிறது.


                 காரல்மார்க்ஸ் மற்றும் சிறந்த சில EBOOKS
No.
Book Title
Author
Download PDF 
Tamil book
1

கார்ல் மார்க்சு

Free Tamil eBooks
2
 Free Tamil eBooks
3
Free Tamil eBooks
4
Free Tamil eBooks
5
Free Tamil eBooks
6
Free Tamil eBooks
7
Free Tamil eBooks
8
Free Tamil eBooks
9
Free Tamil eBooks
10
Free Tamil eBooks
11
Free Tamil eBooks
12
Maruthuvam
Free Tamil eBooks
13
Free Tamil eBooks
14
பொது அறிவு நூல்                                      
Free Tamil eBooks


  பலமாக உள்ள பெரியாறு அணையை பலமிழந்து விட்டது என்று கூறி அரசியல் ஆதாயத்திற்காக கேரள மக்களின் உணர்வுகளை தூண்டி மூன்றாந்தர அரசியல் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறது.

mullaperiyar dam history download

 depositfiles     ||    ziddu

  
     முல்லை பெரியார் அணை தொடர்பான பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையில் பூதாகாரமாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வரலாற்றைக் கூறும் குறும்படம்.

http://www.youtube.com/watch?v=0aimtuMNEOM


 (இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)Wednesday, 14 December 2011

அருமையான பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..,

             
                  கணினிகளின் பயன்பாடு பரவலாகி விட்டபின் புத்தகங்கள் மின்வடிவில் வரத்தொடங்கின. முதலில் காகிதப் புத்தகங்கள் கணினியில் படிப்பதற்காக ஒளிபடுத்தப்பட்டு (scan) ஆவணக் கோப்புகளாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் மின் புத்தகங்களை படிப்பதற்காக கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டதால் பல கோப்பமைப்புகளில் மின்னூல்கள் இப்போது விற்கப்படுகின்றன.

       காகிதப் புத்தகங்களை எண்முறைப் படுத்த தொடங்கப்பட்ட முதல் திட்டம் குடன்பர்க திட்டமாகும். 1971 இல் மேஜைக் கணினிகளில் புத்தகங்களைப் படிப்பதற்காக இது தொடங்கப் பட்டது. 1990 இல், இணையம் விரிவுபடத் தொடங்கிய போது, மின்புத்தகங்கள் குறுந்தகடுகளில் விற்கப்பட ஆரம்பித்தன. 1993 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென தனி மென்பொருள் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு வெளியான On Murder Considered as one of the Fine Arts என்ற புத்தகமே முதல் மின்புத்தகமாகக் கருதப்படுகிறது. அவ்வாண்டே இணையத்தின் மூலம் மின் புத்தகங்களின் விற்பனை தொடங்கியது. 1998 இல் ஐஎஸ்பின் (சர்வதேச புத்தகக் குறியீட்டு எண்) முதன் முதலில் ஒரு மின் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.
          1998 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென ராக்கெட் ஈபுக் மற்றும் சாஃட்புக் என்ற கருவிகள் சந்தையிடப்பட்டன. 1998-99 இல் மின்புத்தகம் விற்கும் வலைத்தளங்கள் தொடங்கப்பட்டன. அறிவியல் புனைவு கதைகளை வெளியிடும் பீன் பதிப்பகம், ஒர் சோதனை முயற்சியாக, தனது புத்தகங்கள் சிலவற்றை மின் புத்தகங்களாக்கி இணையத்தில் இலவசமாக வெளியிட்டது. 2000 இல் காப்புரிமைத் தளைகள் ஏதுமின்றி வெப்ஸ்கிருப்ஷன் நிறுவனம் மின்புத்தகங்களைத் விற்கத் தொடங்கியது. 2005 இல் மோபிபாக்கெட் மின் புத்தக நிறுவனத்தை வாங்கியதன் மூலம், உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனையாளரான அமேசான், மின் புத்தகச் சந்தைக்குள் நுழைந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், சோனி ரீடர், இலியட், ஐரீட் போன்ற பல மின்புத்தக படிப்புக் கருவிகள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு அமேசானின் கிண்டில் கருவி வெளியாகி மின்புத்தக விற்பனை சூடு பிடித்தது. 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பலகைக் கணினி ஐ-பேடு வெளியான பின், மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. கூகுள் நிறுவனமும் தற்போது மின் புத்தக வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது
சிறுகதை , சமூகத்தொடர், கவிதைகள், கட்டுரைகள், வரலாறு என பல்சுவை தமிழ் புத்தகங்கள் உள்ளது 

                                  பல்சுவை தமிழ் புத்தகங்கள்
No.
Book Title
Author
Download PDF 
Tamil book
1
 Free Tamil eBooks
2
 Free Tamil eBooks
3
Free Tamil eBooks
4
Free Tamil eBooks
5
Free Tamil eBooks
6
Free Tamil eBooks
7
Free Tamil eBooks
8
Free Tamil eBooks
9
Free Tamil eBooks
10
Free Tamil eBooks
11
Free Tamil eBooks
12
Free Tamil eBooks
13
Free Tamil eBooks
14
the-secret-tamil                                     
Free Tamil eBooks
Thiruvasakam in Symphony (2005) is an oratorio composed and orchestrated by Ilaiyaraaja. Thiruvasagam is a collection of ancient Tamil poems written by Manikkavacakar. They were transcribed partially in English by American lyricist Stephen Schwartz. The oratorio was performed by the Budapest Symphony Orchestra.
இளையராஜாவின் திருவாசகம் ஆல்பம் MP3வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய  

Depositfiles              ||      Mediafire    ||   ziddu


(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)