Friday, 20 January 2012

சாஹித்திய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..

                  ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.
      இவர் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறார் என்றொரு  பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே! மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?
         ஜெயகாந்தன்  சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து விரிந்து இருக்கின்றது.
       ஜெயகாந்தனின்  இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

 சாகித்திய அகாதமி விருது,  2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருதுகள் பெற்றார்.

புத்தகத்தின் பெயர்      எழுத்தாளர் டவுன்லோட்
சில நேரத்தில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
இன்னும் ஒரு பெண்ணின் கதை                ஜெயகாந்தன்
சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தன்
சிறுகதை பகுதி ஒன்று ஜெயகாந்தன்
சிறுகதை பகுதி  இரண்டு                                                                                         ஜெயகாந்தன்            
சிறுகதை பகுதி மூன்று     ஜெயகாந்தன்

பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" முழுவதும் நல்ல MKV வீடியோ டவுன்லோட் செய் Endrendrum Raja - Musical Full show (2011-2012)

(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி படித்து மகிழுங்கள்.)
5 comments:

This comment has been removed by the author.

Dear Sir

Unable to download book

Please help me , Thanks mail id: ravi75075@gamil.com

If you want free tamil books, you must visit this website

44books.com

Post a Comment

மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...