வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது புத்தகங்கள் மற்றும் நூலகங்களின் வாயிலாகத் தான். எனவே புத்தக பொக்கிஷகளை போற்றி பாதுகாப்போம்.
பண்டைய மெசபடோமியப் பிரதேசம் 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாக துறையில் ஏற்பட்ட குளறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான சென்னாசெர்ப் (கி.மு.1300 – கி.மு.1200) அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், அரசாங்க கடிதங்கள், அரசு உளவாளிகளிடம் இருந்து பெறப்படும் உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் கீழ் வரும் முக்கிய ஆவணங்கள் போன்றவை களிமண் தகடுகளில் எழுதி சூளைகளில் சுட்டு அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவரைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
அசிரியப் பேரரசின் கடைசி அரசரான அசுர்பானிபல் (கி.மு.700 – கி.மு.600) காலத்தில் இக்களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது, அத்தனையையும் வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாப்பது சிரமமாக இருந்த காரணத்தினால் அனைத்தையும் அசிரியாவின் (தற்போது ஈராக்) தலைநகரான நினிவாஹ் (Nineveh – தற்போது மொசூல் (Mosul) ஒன்றிணைத்து அவற்றை துறைவாரியாக பிரித்து அடுக்க உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறை வாரியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் The Royal Library of Ashurbanipal என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான களிமண் தகடுகள் அரசாங்க ஆவணங்களாகத்தான் இருந்தது.
பணிகள் துவங்கிய சிறிது காலத்திலேயே அலெக்ஸாண்டர் இறந்து போனாலும் அலெக்ஸாண்டரின் நெருங்கிய நண்பரும் அப்போதைய எகிப்தின் அரசருமானதலாமி (Ptolemy I; கி.மு.305 - கி.மு.282) முன்னின்று பணிகளை மேற்பார்வையிட்டு நிறைவு செய்தார். இறுதியாக கி.மு.300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.அதன் பிறகு ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகத்தின் பயன்பாடுகளை அறிந்து தங்களது பல்கலைக்கழக வளாகங்களிலிலேயே நூலகங்களை நிறுவத்தொடங்கின.
பிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் எண் ஜோதிட பலன்களை அறிய தரவிறக்க இங்கே
கிளிக்குங்கள்.
அல்லது இங்கே கிளிக்குங்கள்.
பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" முழுவதும் நல்ல தரத்துடன் MKV வீடியோ டவுன்லோட் செய்ய Endrendrum Raja - Musical Full show (2011-2012)
(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)